பழைய நிகழ்வுகளே காரணம் என நினைக்குறேன், அப்பாவின் ஜீப் மோகத்திற்கு. சிகப்பு நிறத்தில் ஒரு ஜீப் அதை அப்படியே அப்பாவிற்கு அர்ப்பணிக்க வேண்டும். என் சிறுவயதில் அவள் அதிகமா திரில்லர் நாவல்கள் படிப்பதை கவனித்திருக்கிறேன், தற்சமயம் அவள் அதிலிருந்து வெகு தூரம் சென்றுவிட்டாலோ? என்னசெய்தாயினும் அம்மாவை புத்தக வாசிப்பிற்க்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். இசை ஜாம்பவான்களின் நிகழ்ச்சிகளுக்கு, அப்பாவை அழைத்துச் செல்ல வேண்டும். முக்கியமாக SP பாலசுப்ரமணியம் கச்சேரிகளுக்கு. முறையான இசை ஞானத்தை அடைய உதவ வேண்டும், கச்சேரிகள் நடத்தவும் உறுதுணையாக இருக்கனும். நேரத்தை பிரித்து, உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்து தரனும். இருவரையும் ஜோடியாக உடற்பயிற்சி செய்ய வைத்தால் நன்றாக இருக்கும். ஒருவரை ஒருவர் மெச்சிக் கொள்வார்கள் தான். குதிரை வளர்ப்பில் ஏனோ ஒரு பிரியம், நல்ல திடகாத்திரமான அரேபிய குதிரையை அவர்கள் வளர்ப்பதை ரசித்திடவேண்டும். நல்ல உடல்நிலையை உறுதி செய்ய இருவருக்கும் வருடம் இருமுறை முழு உடல் பரிசோதனை செய்யனும். முடியும் என்றால், ஸ்டெம்செல் த...
Student | Daily life